ஹோம் /திருச்சி /

பெண்களே உஷார்..! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உண்ணி காய்ச்சல் பரவுது - திருச்சி டீன் எச்சரிக்கை

பெண்களே உஷார்..! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உண்ணி காய்ச்சல் பரவுது - திருச்சி டீன் எச்சரிக்கை

திருச்சி

திருச்சி

Trichy - Unni Fever | உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய வகை உண்ணி காய்ச்சல் பற்றி  திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஏற்பாட்டில் காய்ச்சல் முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய காய்ச்சல் பற்றி திருச்சி அரசு மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க ; பில்டிங் கான்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல்.. பலரை ஏமாற்றிய தில்லாலங்கடி திருநங்கை கைது

இதுகுறித்து டீன் நேரு கூறுகையில், “ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறி.

உண்ணி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இது அதிகமாக பெண்களுக்கு தான் வருகிறது. மண்ணில், தரையில் கை வைத்து யார் அதிகம் புழங்குகிறார்களோ அவர்களுக்கு அந்த காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது.

அறிகுறிகள்:

இதையும் படிங்க ; திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

உடலில் மார்பகத்திற்கு கீழோ, மறைக்கப்பட்ட பகுதியிலோ, முதுகு பகுதியிலோ புண் போன்ற ஆறாத அறிகுறிகள் இருந்தாலும், அம்மைக்கு வரக்கூடிய சிறு சிறு புள்ளிகளாக வரக்கூடிய தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இதன் அறிகுறிகளாககும்.

இவை சில நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக்காய்ச்சல் போன்று மாறிவிடுகிறது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் வழியாகவும் இந்த உண்ணி காய்ச்சல் பரவுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நோயின் அறிகுறிகள் தென்படும நோயாளிகள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதை விடுத்து விட்டு மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy