முகப்பு /திருச்சி /

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..

X
திருச்சி

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

Uraiyur Vekkali Amman Temple : சோழர்களின் தலைநகராம் உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி மக்களை காத்தருளும் தெய்வம் வெக்காளியம்மன். இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

சோழர்களின் தலைநகராம் உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி மக்களை காத்தருளும் தெய்வம் வெக்காளியம்மன். இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கியது.

இதையும் படிங்க : இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான இன்று காலை தேர் திருவிழா வெகு விமர்சியாக துவங்கியது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெற்றது.. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Trichy