Home /trichy /

திருப்பதிக்கு போகாதவர்கள் திருச்சிக்கு வருகை - காரணம் இந்த கோயில்

திருப்பதிக்கு போகாதவர்கள் திருச்சிக்கு வருகை - காரணம் இந்த கோயில்

திருப்பதிக்கு

திருப்பதிக்கு போகாதவர்கள் திருச்சிக்கு வருகை- காரணம் இந்த கோயில்

குணசீலத்தில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசித்தாலே திருப்பதி பெருமாளை தரிசித்ததற்கு சமம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குணசீலம்.

    கொள்ளிடக்கரையின் ஓரத்தில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதி, இயற்கை வளத்தை பெற்று கண்களுக்கு அழகாய் காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் ஊரின் பெயரைப் போல சிறப்புவாய்ந்த  திருத்தலம் ஒன்று இருந்து வருகிறது.

    திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் கூட திருச்சிக்கு வந்து இவரை, தரிசித்து செல்லாமல் இருந்ததில்லை.

    ஆம், இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

    திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு, செல்ல முடியாதோர் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்து இங்குள்ள பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

    காரணம், இங்குள்ள வெங்கடாஜலபதியை தரிசித்தாலே திருப்பதி பெருமாளை தரிசித்த இதற்கு சமம் என்கின்றனர் அங்குள்ள பக்தர்கள்.

    மேலும் இத்திருக்கோயிலில் சிறப்பு என்னவென்றால் மனநலம் பாதிக்கப்பட்டு,

    பேய், பிசாசு, பில்லி சூனியம்  போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த பெருமாள் கோயிலுக்கு வருகை புரிகின்றனர்.

    மேலும் அப்படி பாதிக்கப்பட்டு வருபவர்களை 48 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

    இங்கு தினமும் பிரசன்ன வெங்கடாஜலபதியின் அருள் பெற்ற தீர்த்தம் அனைவரின் முகத்தில் தெளிக்கப்படுகிறது.

    48 நாட்களின் முடிவில் பிரசன்ன வெங்கடாசலபதியின்,
    அருளால் அவர்களின் வியாதி குணப்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

    மேலும் இங்கு தமிழ்நாட்டில் முதன் முதலாக, தமிழ்நாடு அரசு உரிமத்தின் உத்தியோகபூர்வ முத்திரை என்று, ஒரு மனநல சுகாதார மறுவாழ்வு மையம் இங்கு அமைக்கப்பட்டது.

    இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தினமும் மூன்று சடங்குகள் நடைபெறும்.

    ஆண்டு பிரம்மோற்சவம் என்பது ஒரு பதினொரு நாள் திருவிழா ஆகும்.

    இந்த கோயில் ஒரு பரம்பரை நிறைவேற்று அதிகாரியால் பராமரிக்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Tirupati, Trichy

    அடுத்த செய்தி