திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள மேலூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா. பசுமை நிறைந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவானது திருச்சி மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் திகழ்ந்து வருகிறது இந்த பூங்கா. வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு குடும்பம் குடும்பமாய் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் வந்து கண்டு களித்து வருகின்றனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக திகழ்கிறது. இது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காகவும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
பூங்காவின் நுழைவாயிலில் நுழைந்த உடனே நீர் சலசலப்புடன் விழும் ஓசை நம் காதில் விழும். பிறகு வட்ட வடிவில் ஒரு மிகப்பெரிய செயற்கை பட்டாம்பூச்சியும் பொருத்தப்பட்டுள்ளது. நுழைந்த உடனே மக்களை கண் கவர வைக்கும் பூங்காவாக இது திகழ்கிறது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் ஆங்காங்கே சிறகடித்து செல்லும். மேலும் புல்வெளிகளும் பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் கொழும்பு பூக்களும் ஒரு இதமான சூழலை ஏற்படுத்துகிறது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள், நீரூற்றுகள், சிறுவர்கள் ரயில் என பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு செல்வது எப்படி... இங்கே க்ளிக் செய்க
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சாதாரண பூங்காவாக இல்லாமல் இங்கு சென்று திரும்புபவர்களுக்கு ஒரு இதமான அனுபவத்தை வழங்குகிறது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா..
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.