Home /trichy /

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. விழாக்கோலம் பூண்டது காவிரி பாலம்..

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. விழாக்கோலம் பூண்டது காவிரி பாலம்..

திருச்சி

திருச்சி - விநாயகர் சதுர்த்தி

Trichy Vinayakar Chadurthi | திருச்சி மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது .பொதுமக்கள் மகிழ்ச்சி. குறிப்பாக காவிரி பாலத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் அரசு கூறிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 1,139 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது குறிப்பாக திருச்சி மாநகரத்தில் 230 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அனைவரும் காவேரி ஆற்றங்கரை நோக்கி புறப்பட்டனர்.

இதை தொடர்ந்து திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலையை கரைக்க வருபவர்களுக்கு காவிரி ஆற்றின் பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நின்று விநாயகர் சிலையை கரைக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து காவல்துறையினர் தெரிவித்து வந்தனர்.

அதன்படி வரும் அனைத்து விநாயகர் சிலைகளையும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைத்து சென்றனர்.

எந்தவிதமான ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் காவிரி பாலம் முழுவதும் பேரிகார்டுகள், கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். குறிப்பாக 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர் மேலும் வீட்டிலிருந்து குடும்பத்துடன் சிறிய அளவிலான சிலைகளை கரைக்க வரும் பொதுமக்கள் உடனடியாக சிலைகளை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் காவிரி ஆற்றில் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்களை தொடர்ந்து காவிரி பாலத்தில் அதிக நேரம் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை  சீர் செய்யும் பணி  செய்தனர்.

பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் முதல் உதவி செய்வதற்கான மருத்துவ குழு அடங்கிய குழுக்களையும் அப்பகுதியில் வைத்திருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பொதுமக்கள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பிள்ளையார் சிலைகளை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றில் அமைதியாக கரைத்து விட்டு கோஷங்களை எழுப்பி விட்டு திரும்பி சென்றனர். விநாயகர் சிலையை கரைக்கும் நோக்கத்தோடு வந்த அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சியாக சென்றனர்.

காவிரி பாலம் முழுவதும் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டு மிக அழகாக  ஜொலிப்பாக காணப்பட்டது.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி