நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன், தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இவ்விருவரின் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார்களான நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஷாருக் கான், நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விக்ரம் பிரபு, இயக்குனர்கள் கௌதம் மேனன், அட்லி உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவனின் பெரியப்பா.
இந்நிலையில், விக்னேஷ் சிவனுக்கு திருச்சியில் வசித்து வரும் அவரின் பெரியப்பா மாணிக்கம், திருமண வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் இருப்பினும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்து கூற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
திரைப்பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த விக்னேஷ் சிவன், அவருடைய சொந்த பெரியப்பாவுக்கு அழைப்பு விடுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கத்திடம் கேட்டபோது, எம்ஜிஆர் சிவாஜி நடித்தது போல் இதுவும் ஒரு சினிமா சூட்டிங் போன்று தான் உள்ளது. இது கல்யாணமாக தெரியவில்லை.. திருமணம் குளிகை நேரத்தில் நடந்துள்ளது. திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றாலும் அவர் நன்றாக இருக்கட்டும் என தனது வாழ்த்தை நம்மிடம் பகிர்ந்தார்.
செய்தியாளர் - என்.மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.