ஹோம் /திருச்சி /

மதுரை மாட்டுத்தாவணி போல உருவாகும் திருச்சி பஞ்சப்பூர்.. மனக்கசப்பில் வியாபாரிகள்..!

மதுரை மாட்டுத்தாவணி போல உருவாகும் திருச்சி பஞ்சப்பூர்.. மனக்கசப்பில் வியாபாரிகள்..!

திருச்சி

திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட்

Trichy Panjappur Vegetable Market | திருச்சி பஞ்சபூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம், காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாநகரில் ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது தான் இந்த காந்தி மார்க்கெட். இந்த மார்க்கெட் பகுதியில் மொத்தம், சில்லறை வியாபாரம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் கடைகள் அமைக்க இங்கு போதுமான இடவசதி இல்லை, அதேபோல மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் திருச்சி அருகே உள்ள கல்லுக்குடி பகுதியில் புதிய மார்க்கெட் கட்டப்பட்டது.

மனக்கசப்பில் வியாபாரிகள்:

ஆனால் அந்த பணி தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது மார்க்கெட் கட்டி முடித்த பிறகும்கூட, வியாபாரிகளை அழைத்து சரியான முறையில் ஆலோசனை செய்யப்படவில்லை. மிகவும் குறுகிய இடத்தில் அதிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு வியாபாரம் செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

குறிப்பாக கல்லுக்குடியில் மார்க்கெட் பகுதியில் சில்லறை விற்பனைகள் மட்டுமே செயல்பட முடியும். மொத்த வியாபாரம் செய்வதற்கான வசதிகள் அங்கு அமைத்து தரப்படவில்லை. ஆகையால் வியாபாரிகள் அனைவரும் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

திருச்சி பஞ்சபூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டியுள்ளார் . இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் காய்கறி மார்க்கெட் போன்ற அனைத்து வசதிகளிலும் செய்து தரப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

வியாபாரிகளின் கோரிக்கை:

இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. கல்லுக்குடி மார்க்கெட் போன்று இந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் சங்கத்தை அழைத்து முறையாக ஆலோசனை செய்து பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சரியான முறையில் செயல்பட்டு வரும் வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்க வேண்டும். அரசியல் கட்சி சார்ந்த பிரமுகர்களுக்கு வேண்டியவர்கள் அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் என கடைகளை யாருக்கும் ஒதுக்க கூடாது.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வியாபாரிகளுக்கு ஒதுக்கும் கடைகள் தவிர மீதம் உள்ள கடைகள் மட்டுமே மற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும் இதில் முறைகேடுகள் நடைபெற்றால் மீண்டும் கல்லுக்குடி மார்க்கெட் போன்று ஒருங்கிணைந்த பஞ்சபூரில் அமைய உள்ள மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy