ஹோம் /திருச்சி /

பாலியல் வன்கொடுமை பற்றிய அரசியல் விழிப்புணர்வு படம் - வி3 இயக்குநர் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்

பாலியல் வன்கொடுமை பற்றிய அரசியல் விழிப்புணர்வு படம் - வி3 இயக்குநர் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்

X
வி3

வி3 திரைப்பட போஸ்டர்

Trichy | பாலியல் வன்கொடுமைக்கு பின்னணியில் அரசியல் தலையீடு எப்படி வருகிறது என்பதை வி3 படத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவர உள்ள ”வி3” திரைப்படத்தின் இயக்குனர் அமுதவாணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ’பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வேண்டும் என்பதும் மேலும் இதுபோல் இனி எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்பது தான் இந்த கதையின் மையக்கரு. மேலும் படத்தின் மூலம் இதற்கான தீர்வை சொல்லி உள்ளோம். இந்த தீர்வு தான் பேசும் பொருள் ஆகும் என நம்புகிறேன்.

”இந்த திரைப்படம் எந்த தனி சம்பவத்தையும் சார்ந்தது அல்ல. இது சமுதாயத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, மகளின் தந்தை போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால் நியாயம் கேட்க சென்ற இடத்தில் அவருக்கு மிகப்பெரிய அநீதி நடக்கிறது. இப்படியாக கதை நகர்கிறது.

திரைப்படத்தில் வரும் பாலியல் வன்கொடுமைக்கு பின்னணியில் அரசியல் தலையீடு எப்படி வருகிறது என்பதையும் இந்த திரைப்படம் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. சிஸ்டம் எப்படி இயங்குகிறது என்பதை திரைப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் 760 பேர் நடித்துள்ளனர்.

மார்கழி குளிரில் நடுங்கும் நடைபாதை வாசிகள்.. போர்வை வழங்கிய திருச்சி மாணவி!

இதில் 13 போராட்ட காட்சிகள் உள்ளது. இத்திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பதாக இருந்தது. அவர் சம்பளம் அதிகம் என்பதால் சாய் பல்லவி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நேரம் இன்மை காரணமாக வரலட்சுமி அவர்களை அணுகி நடிக்க வைத்தோம்.

இந்த திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்க மிகவும் சிரமப் பட்டேன். நல்ல கதைக்களத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதை இயக்கியும் உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: மணிகண்டன், திருச்சி.

First published:

Tags: Local News, Trichy