முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சியில் நம்பர் லாட்டரி விற்பனை.. 4 பேர் கைது..!

திருச்சியில் நம்பர் லாட்டரி விற்பனை.. 4 பேர் கைது..!

R_Tn_Trichy_28/04/23_Trichy Lottery vendors arrested

R_Tn_Trichy_28/04/23_Trichy Lottery vendors arrested

R_Tn_Trichy_28/04/23_Trichy Lottery vendors arrested

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுப்பதற்காகவும், மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகரம் செந்தண்ணீர்புரம் பகுதிகளில் நம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பாலக்கரை போலீசார், சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 20), காஜாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி (வயது 35), மற்றும் கருப்பையா (வயது 37)  ஆகிய நான்கு பேரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

top videos
    First published:

    Tags: Lottery, Trichy