ஹோம் /திருச்சி /

திருச்சியில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்...

திருச்சியில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்...

திருச்சி

திருச்சி

Trichy World Rabies Day 2022 | உலக வெறி நாய் தடுப்பு தினத்தையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

வெறிநாய் தடுப்பு தினத்தை ஒட்டி திருச்சி சுப்பிரமணியபுரம் கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டெம்பர் 28 ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அம்முகாம்களுக்கு அழைத்து சென்று வெறிநோய் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வாதைத் தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதனைதொடந்து திருச்சி சுப்பிரமணியபுரம் கால்நடை மருந்தகத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுச் சென்றனர். திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் கோட்டம், லால்குடி கோட்டம், முசிறி ஆகிய கோட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy