முகப்பு /திருச்சி /

திருச்சி அரசு மருத்துவமனையில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

X
மருத்துவக்

மருத்துவக் கழிவுகள்

Trichy Govt Hospital | திருச்சி அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு, தினந்தோறும் திருச்சி மட்டுமல்லாது அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்து, தற்கொலை முயற்சி, தீக்காயங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவிற்கு பின்புறமுள்ள பகுதியில் அதிக அளவிலான குப்பைகளும், குளுக்கோஸ் பாட்டில்களும், காலணிகளும், மருத்துவ கழிவுகளும் பாலிதீன் பைகளில் வைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது தரையிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.

திருச்சி சாலைகளில் தாறுமாறாக பைக் ஓட்டி இளைஞர்கள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்களும், ஈக்களும் அதிக அளவில் உள்ளது. இதனால் நோயாளிகள் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பகுதி மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது விரைந்து நாள்தோறும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Local News, Trichy