ஹோம் /திருச்சி /

திருச்சியில் வெங்காய மூட்டைகளுக்கு இடையில் கடத்திய ரூ.55 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல்

திருச்சியில் வெங்காய மூட்டைகளுக்கு இடையில் கடத்திய ரூ.55 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்

Trichy District News : திருச்சிக்கு 55 லட்சம் குட்கா கடத்தி வந்த இரண்டு பேர் குண்டாசில் கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

கிருஷ்ணகிரி மாவட்டதை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் தங்களுடைய 4 சக்கர வாகனங்களில் குட்கா போன்ற போதை பொருட்களை வெங்காய மூட்டைகளின் இடையில் வைத்து திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் சந்திப்பில் அவர்கள் வந்தபோது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், இவர்களின் வாகனமும் போலீசாரால் சோதிக்கப்பட்டது. அப்போது வெங்காய மூட்டைகள் இல்லை என போலீசாருக்கு சந்தேகம் வரவே மூட்டையை திறந்து காட்டச் சொல்லிகேட்டனர்.

அவர்கள் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக அமைந்ததால் சேகர் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் கடந்த 20ம் தேதிகைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : பள்ளி கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் சிசு.. திருச்சியில் அதிர்ச்சி!

விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் தெரியவந்தது. மேலும் இவர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும் அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். மாநகரில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீதும் பள்ளி மற்றும் முக்கிய அலுவலங்கள் அருகே இதுபோன்ற குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: Local News, Trichy