Home /trichy /

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒருவழிச்சாலையில் ஆபத்தான பயணம்.. அலறும் வாகன ஓட்டிகள்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒருவழிச்சாலையில் ஆபத்தான பயணம்.. அலறும் வாகன ஓட்டிகள்

திருச்சி

திருச்சி பொன்மலை

Trichy TVS Toll Gate Road | கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வழிச்சாலையை இருவழிச் சாலையாக பயன்படுத்தும் பொன்மலை மக்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி மாநகரில் பரபரப்பாக இயங்கக்கூடிய முக்கிய சாலைகளில் ஒன்று டிவிஎஸ் டோல்கேட் சாலை. இந்த சாலை வழியாகவே திருச்சி விமான நிலையத்திற்கும், தஞ்சாவூர் புதுக்கோட்டை நகரங்களுக்கும் சென்றாக வேண்டும். மேலும் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான பிரதான நெடுஞ்சாலையாக இந்த சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதேநேரத்தில் திருச்சி மாநகரிலிருந்து பொன்மலைக்கு செல்ல இந்த ஒருவழிச்சாலையை, இருவழி சாலையாக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் .

இந்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து பல்வேறு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

பொன்மலைக்கு செல்வதற்காக நெடுஞ்சாலை நடுவே ஒரு சுரங்க பாதையோ அல்லது மேம்பாலமோ அமைத்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது . ஆனால் நெடுஞ்செலுத்துறை சார்பாக அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  வளரும் நெற்குதிர்கள்?... திருச்சியில் ஓர் அதிசயம்!

பொன்மலைக்கும் பொன்மலை பனிமனைக்கும் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் ஒருவழிச்சாலையில் செல்வதற்கும் வருவதற்கும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

குறிப்பாக மாலை அல்லது காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதே சமயம் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மிக வேகமாக வருவதால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றால் கட்டாயமாக நெடுஞ்சாலையை சீரமைத்து சுரங்க பாதை அமைக்க வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:  அடேங்கப்பா.. மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.. சாபவிமோசனம் தரும் ஆலயம் இது..

மேலும் அப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க  வேகத்தடைகள் அமைக்க வேண்டும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு சிக்னல் அமைக்க வேண்டும் இவற்றை இரண்டையும் செய்தால் நிச்சயமாக விபத்துக்களை தடுக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நெடுஞ்சாலை , மாவட்ட நிர்வாகமோ செய்வதற்கு காலதாமதம் ஆகிறது.  பொதுமக்களின் உயிரை சிறிதும் பொருட்படுத்தாமல் மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி