Home /trichy /

டிரங்கு பெட்டி ஞாபகம் இருக்கா? அந்த காலத்து பீரோ இது தான்..!!

டிரங்கு பெட்டி ஞாபகம் இருக்கா? அந்த காலத்து பீரோ இது தான்..!!

திருச்சி

திருச்சி - டிரங்கு பெட்டி

Trunk Boxes : முன்பெல்லாம் திருமணம், சீமந்தம் போன்ற விஷேசங்கள் என்றால் நகைகள், சீர்வரிசை பொருட்களுடன் டிரங்கு பெட்டியும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அக்காலத்தில் இதனை பயன்படுத்தியவர்கள் கூட இப்போது இவற்றை விரும்பி வாங்குவதில்லை..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
 நம் அன்றாட பயன்பாட்டிலிருந்து மறைந்துபோன ஒரு பொருளாக இருக்கக்கூடிய டிரங்க் பெட்டியை ஞாபகம் இருக்கா? ஆனால் திருச்சியில் இன்னும் ஒரு சிலர் டிரங்கு பெட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். 

முன்பெல்லாம் திருமணம், சீமந்தம் போன்ற விஷேசங்கள் என்றால் நகைகள், சீர்வரிசை பொருட்களுடன் டிரங்கு பெட்டியும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அந்த காலத்தில் பீரோவிற்கு சமமாக கருதப்பட்ட டிரங்கு பெட்டி, காலப்போக்கில் நவநாகரீக சூட்கேஸ்களின் வரவால் நம் வாழ்வை விட்டு அகன்று சென்றுவிட்டன. ஆனால் இன்றும் பள்ளி, கல்லுாரி விடுதி, போலீஸ் பயிற்சி பள்ளிகளில் இவற்றை பார்க்க முடிகிறது.



திருச்சி நகர் பகுதி மற்றும் கிராமங்களில் உள்ள குறுந்தொழில்களில் டிரங்கு பெட்டி தயாரிப்பும் ஒன்று. அந்த காலத்தில் கல்யாண சீர் வரிசையில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த இப்பெட்டி, இந்த கால சீர்வரிசையில் தவிர்க்கப்படும் பொருளாகி விட்டது.

நவீன பிளாஸ்டிக் சூட்கேஸ்கள், பெட்டிகள் வந்ததால் டிரங்கு பெட்டிக்கு மவுசு இல்லாமல் போனதால் டிரங்கு பெட்டி தயாரிப்பு தொழில் அழிந்து வருகிறது. இப்பெட்டிகளை வாங்க ஆள் இல்லாததால் இவற்றை விற்க வழியில்லாமல் தவிக்கிறார்கள் இதன் உற்பத்தியாளர்கள்.

திருச்சியின் மேலபுதூர் பகுதியை சேர்ந்த டிரங்க் பெட்டி கடை உரிமையாளரிடம் இது தொடர்பாக கேட்டபோது...

என் குடும்பம் 4 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். முன்பெல்லாம் பெட்டி என்றாலே, டிரங்கு பெட்டிகளை தான் அதிகம் வாங்குவார்கள்.

அதுதான் அவர்களுக்கு பணம் மற்றும் நகைகளை வைக்கும் 'லாக்கர்'ஆக இருந்தது. அக்காலத்தில் இவற்றை பயன்படுத்தியவர்கள் கூட இன்றைய சூழ்நிலையில் இந்த பெட்டிகளை விரும்பி வாங்குவது இல்லை. சில பழமை விரும்பிகள், ராணுவ வீரர்கள், மட்டுமே பெட்டிகளை வாங்கி செல்கிறார்கள். அவர்களை நம்பி தான் தொழிலை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தவிர வங்கிகளில் பணத்தை கையாள டிரங்கு பெட்டியை பயன்படுத்துவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது. மேலும் பெட்டியின் அடக்க விலையில் வைத்து, அதற்கு மேல் லாபம் வைத்து விற்றால் விலை அதிகம் என்று யாரும் வாங்கமாட்டார்கள். அதனால், பெரியளவில் லாபம் இல்லாமல் தான் பெட்டிகளை விற்கிறோம்.” என்றார்.

டிரங்கு பெட்டிகளை வாங்க விரும்புபவர்கள்  9976111137 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.

தொடர்புக்கு: சலாம் இண்டஸ்ட்ரீஸ், மேலபுதூர், திருச்சி.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி