ஹோம் /திருச்சி /

திறக்கப்படுமா திருச்சி பழைய காவேரி பாலம்? ஏங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்!

திறக்கப்படுமா திருச்சி பழைய காவேரி பாலம்? ஏங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்!

X
திறக்கப்படுமா

திறக்கப்படுமா திருச்சி காவேரி பாலம்

Trichy cauvery bridge | பாலத்தில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து செயல்படாமல் இருந்ததால் பாலத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என ஆய்வு.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி பழைய காவேரி பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகளின் வசதிக்காக திறந்து விட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி - ஸ்ரீரங்கம் இரண்டையும் இணைக்கும் மைய பாலமாக திகழ்வது காவிரி பாலமாகும். இந்த பாலத்தில் அடிக்கடி விரிசல், சேதம் ஏற்பட்டால் அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி பாலம் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த செப்டம்பரில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. ஒரு புறம் பணிகள் நடக்க, மற்றொரு புறம் இருசக்கர வாகனங்கள் மட்டும் பாலத்தின் மீது செல்ல அனுமதிக்கபட்டது. இந்தநிலையில் நான்கு சக்கர வாகனங்கள் , கனரக வாகனங்கள் ஒயாமேரி பாலம் வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டது.

பின்பு பணிகள் தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த மாதம் முழுமையாக காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களும் ஒயாமேரி மேம்பாலம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால் கடந்த இரண்டு வாரமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து அதிகளவில் பள்ளி கல்லூரி மற்றும் அன்றாட கூலி வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. இதனால் இருசக்கர வாகனம் செல்வதற்கு பழைய காவேரி பாலத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் பழைய காவிரி பாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இப்பாலத்தில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து செயல்படாமல் இருந்ததால் பாலத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என வல்லுநர் குழுக்களை வைத்து ஆராய்ந்து பின்னரே பழைய காவேரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: மணிகண்டன், திருச்சி.

First published:

Tags: Local News, Trichy