முகப்பு /திருச்சி /

திருச்சி மக்களே உஷார்.. நாளை இந்த பகுதிகளில் எல்லாம் குடிநீர் விநியோகம் ரத்து!

திருச்சி மக்களே உஷார்.. நாளை இந்த பகுதிகளில் எல்லாம் குடிநீர் விநியோகம் ரத்து!

குடிநீர் விநியோகம் ரத்து

குடிநீர் விநியோகம் ரத்து

Trichy news| ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் - மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் (17.05.2023)காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.

எனவே கீழ்கண்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

மண்டலம்-1 : மேலூர், தேவிஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், T.V. கோவில், அம்மாமண்டபம், AIBEA நகர், தேவதானம்்

மண்டலம்-2 : விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது

மண்டலம்-3 : அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்குஉக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மை வீதி, M.K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர்.

இதையும் படிங்க | பல ஆண்டுகளுக்கு பயன் தரும் பாக்கு சாகுபடி.. பயிரிட்டு வளர்ப்பது எப்படி?

மண்டலம்-4 : ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், LIC புதியது, LIC சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் E.B காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது,ரெங்காநகர்,

மண்டலம்-5 : மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு (18.05.2023) அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது. மறுநாள் (19.05.2023) அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Trichy, Water