Home /trichy /

சுயதொழிலில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி- ஆச்சர்யப்படுத்தும் திருச்சி பெண்

சுயதொழிலில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி- ஆச்சர்யப்படுத்தும் திருச்சி பெண்

திருச்சியைச்

திருச்சியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிப் பெண் யார் உதவியையும் எதிர்பாராமல் சுயமாக வாழ்ந்துவருகிறார்.

திருச்சியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிப் பெண் யார் உதவியையும் எதிர்பாராமல் சுயமாக வாழ்ந்துவருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
இரு பார்வைகளை இழந்தவர்கள் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திருச்சியை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற பெண் இருந்துவருகிறார்.

திருச்சி மாநகரம் மன்னார்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி. அவரது சிறுவயதில் இருந்து இரு கண் பார்வையிலும் குறைபாடு இருந்ததால் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்ந்து அவரது குறைபாடுகளை பெரிதாக பொருட்படுத்தாமல் வாழ்ந்து வந்தார். வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியோடு தொடர்ந்து மன்னார்புரத்தில் உள்ள ஒரு தனியார் அமைப்பின் மூலமாக கைத்தொழில் செய்வதற்கான பயிற்சிகளை முறையாக மேற்கொண்டார்.

முத்து லெட்சுமி


குறிப்பாக கூடை பின்னுவது, மேட் செய்வது, துணி தைப்பது போன்ற பல்வேறு சிறிய அளவிலான கைத்தொழில்களை முறையாக பயிற்சி பெற்று திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஒரு சிறிய அளவிலான கடையை வாடகைக்கு எடுத்து தனது தொழிலை செய்து வருகிறார்.

கூடை பின்னும் முத்து லெட்சுமி


இது குறித்து பேசிய அவர், ‘பார்வைத் திறன் இல்லாததால் எங்களால் எந்த தொழிலையும் செய்ய முடியாது என சில கருதுகிறார்கள். மேலும் யாரையும் நம்பி நாம் வாழக்கூடாது. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து இந்த தொழிலை செய்து வருகிறேன் என்றார்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இப்பகுதியில் கூடை பின்னுதல், மேட் தைத்தல், துணி தைத்தல் போன்ற சிறிய அளவிலான பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகிறேன். பொதுமக்களின் வரவேற்பு போதிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு சிலர் ஆதரவளித்து என்னுடைய பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

அதுவே மன நிம்மதியாக உள்ளது என்றார். மேலும் தன்னைப் போல் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவிக்கரங்களை நீட்ட வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார். குறிப்பாக உடலில் ஊனம் ஏற்பட்டால் அது ஒரு பெரிய குறையே அல்ல. அதை நினைத்து துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் அடையலாம்.

ஆகையால் மாற்றுத்திறனாளிகள் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. தனது சொந்த காலில் நின்று இந்த சமுதாயத்தில் ஜெயிக்க வேண்டும் என உறுதியுடன் தெரிவித்தார் முத்துலட்சுமி.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி