ஹோம் /திருச்சி /

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விசிக ஆர்ப்பாட்டம்

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விசிக ஆர்ப்பாட்டம்

X
கண்டன

கண்டன ஆர்ப்பாட்டம்.

Trichy VCK Protest | வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி 100 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன  தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கண்டித்தும் அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாநகர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Trichy, VCK