Home /trichy /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மின்தடை

மின்தடை

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சி மாவட்டம் அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (10ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி மாவட்டம் அளுந்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து சேதுராப்பட்டி மற்றும் பாத்திமாநகர் செல்லும் மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10 முதல் மாலை 5 மணி வரை அளந்தூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சேதுராப்பட்டி, பாத்திமாநகர், எரகுடி, கும்பக்குறிச்சி, ஓடக்குறிச்சிப்பட்டி, சரளப்பட்டி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி. மேலப்பச்சக்குடி, இ.மேட்டுப்பட்டி, ராசநாயக்கன்பட்டி, பூதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி