Home /trichy /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

மின்தடை

மின்தடை

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakudi (Kallakudy), India
    திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூா், மேலரசூா், மால்வாய்,
    சரடமங்கலம், எம். கண்ணனூா், ஓரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அலுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலைக்கூடலூா், சிறுவயலூா்,  காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ.மேட்டூா், விளாகம்,
    குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, ப.கல்விக்குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி