Home /trichy /

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

திருச்சியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்..

மின்தடை

மின்தடை

திருச்சி  மாவட்டம்துறையூர் துணை மின் நிலையத்தில்  மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thuraiyur, India
    திருச்சி மாவட்டம் துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக் கிழமை) 3ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருச்சி மாவட்டம் துறையூர் துணை மின் நிலையத்தில் மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை திருச்சி மாவட்டம் துறையூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி