முகப்பு /திருச்சி /

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா துவக்கம்..

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா துவக்கம்..

X
திருவானைக்காவல்

திருவானைக்காவல்

Trichy News | திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சியில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழா வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தையொட்டி முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடைபெற்ற பின்னர் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Trichy