முகப்பு /திருச்சி /

திருச்சியில் 500 பேருக்கு இலவச டாட்டூ... உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு புதிய முயற்சி

திருச்சியில் 500 பேருக்கு இலவச டாட்டூ... உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு புதிய முயற்சி

X
டாட்டூ

டாட்டூ போடும் இளைஞர்

Trichy | திருச்சியில் உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு டாட்டூ போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சியில் தமிழ் எழுத்தை டாட்டுவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட்டூ ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் முத்துக்குமார். 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக, "தமிழ்" என்ற வார்த்தையை 500 பேருக்கு டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் 500 பேருக்கு இலவசமாக டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை தொடங்கிய இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஆண்கள், இளைஞர்கள் உள்பட பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் வார்த்தையை டாட்டூவாக வரைந்து கொண்டனர்.

டேஸ்ட்டியான மூலிகை உணவுகள் சாப்பிடனுமா? திருச்சி அக்கா கடைக்கு கண்டிப்பா போங்க!

இந்த உலக சாதனை நிகழ்ச்சி இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வரும் மார்ச் 1 முதல் 31 வரை விருப்பமான டாட்டூ டிசைன் ஒரு இன்ச் 99 ரூபாய்க்கு வரைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அவருடன் வந்த ஒரு நபரும் இந்த சலுகையை பெறலாம் என முத்துக்குமார் அறிவித்தார்.

First published:

Tags: Local News, Trichy