முகப்பு /திருச்சி /

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா அட்டவணை - முன்னேற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

Trichy District | திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலில் வைகுண்டஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், டிசம்பர் 23ஆம் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1ஆம் தேதி மோகினி அலங்காரமும், 2ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

8ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். மேலும், விழாவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதாலும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Must Read : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

இந்நிலையில், பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வண்ணமும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Local News, Srirangam, Trichy, Vaikunda ekadasi