ஹோம் /திருச்சி /

திருச்சியில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை - எப்போது துவங்குகிறது?

திருச்சியில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை - எப்போது துவங்குகிறது?

விமான சேவை

விமான சேவை

Trichy District | திருச்சியில் இருந்து துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அரபுநாடுகளுக்கு செல்லலாம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை வழியாக துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கு வசதியாக, புதிய விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருச்சி விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்து இலங்கை வழியாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக புதிய சேவை தொடங்கப்படுகிறது.

  தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அதபோல, சுற்றுலா மற்றும் வியாபார நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அதன்படி, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் இருந்து துபாய் செல்லும் பயணிகளின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில், திருச்சியில் இருந்து துபாயிக்கு நேரடியாக செல்ல  சென்னை வழியாகவோ அல்லது, இலங்கை சென்று அங்கியிருந்து மாற்று விமானங்கள் மூலம் துபாய்க்கு பயணிகள் சென்று வருகின்றனர். இதேபோலத்தான் துபாயில் இருந்து திருச்சிக்கு வருவதற்கும் சென்னை அல்லது இலங்கை போன்ற இடங்களுக்குச் சென்று மாற்று விமானங்களை பயன்படுத்தி வரவேண்டியுள்ளது.

  எனவே, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இதனை கருத்தில் கொண்டு, பிட்ஸ்ஃஏர் வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை துவங்கப்படுகிறது. இதில், வாரந்தோறும் வியாழன், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

  அதன்படி, திருச்சிக்கு வரும் புதிய விமான சேவையின் நேர விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 10.25 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து புறப்படும் இந்த விமானம 11.25 திருச்சிக்கு வருகிறது. பிறகு, திருச்சியில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு இலங்கை செல்கிறது.

  Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

  சனிக்கிழமை, பகல் 12.45க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1.45க்கு திருச்சிக்கு வந்தடைகிறது. பின்னர், 2.45க்கு திருச்சியில் இருந்து ருந்து புறப்பட்டு பிற்பகல் 3.45க்கு கொழும்புக்கு செல்கிறது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  ஞாயிறுக் கிழமைகளில், காலை 10 மணிக்கு கொழும்புவில் இருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணிக்கு திருச்சியை அடைந்து, மீண்டும் 11.45க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12.45க்கு கொழும்புவை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Flight travel, Local News, Trichy