முகப்பு /செய்தி /திருச்சி / "வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது" - திருச்சி சிவா!

"வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது" - திருச்சி சிவா!

திருச்சி சிவா

திருச்சி சிவா

Trichy siva | கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவானின் வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தனது வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிப்பதாக தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறாததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்புக் கொடி காட்டியுள்ளனர். இதனையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெளிநாடு சுற்றுப்பணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய திருச்சி சிவா, தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதையும் பேசும் மனநிலையில்தான் இல்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tiruchi Siva, Trichy