Home /trichy /

திருச்சி பள்ளியில் சிறப்பு மாணவர்களுக்கு குதிரை சவாரி மூலம் சிகிச்சை

திருச்சி பள்ளியில் சிறப்பு மாணவர்களுக்கு குதிரை சவாரி மூலம் சிகிச்சை

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு குதிரைப் பயிற்சி

திருச்சி மாவட்டம் சாத்தனூரிலுள்ள பள்ளியில் சிறப்பு மாணவர்களுக்கு சிகிச்சைக்காக குதிரைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருச்சி கேகே நகர், கே.சாத்தனூர் பகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு மூன்று முதல் 14 வயதிற்கு உட்பட்ட அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக 'இன்டேக்ட் சிறப்பு பள்ளி' துவங்கப்பட்டது.

இந்தச் சிறப்புப் பள்ளியில் நீச்சல் மற்றும் நீர்வழி சிகிச்சை, இயன் முறை சிகிச்சை, பேச்சு, இசை, யோகா, புலன் உணர்வு தூண்டல், நடத்தை மாற்று சிகிச்சைகள் சிறப்பு கல்வியுடன் சேர்த்து அளிக்கப்படுகிறது.

சிறப்பு பள்ளி மாணவர்கள்


இந்தப் பள்ளியில் சிறப்பம்சமாக தமிழகத்தில் முதன்முறையாக அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு குதிரை சவாரி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குதிரைப் பயிற்சி பெறும் மாணவர்


இன்டேக்ட் சிறப்புப் பள்ளியில் குதிரை சவாரி சிகிச்சை 2010 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்நாட்டின் பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், மற்றும் குதிரை பயிற்சியாளர் மூலம் முறையான பயிற்சி இப்பள்ளி பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

திருச்சி சிறப்பு பள்ளிக்கான கூகுள் மேப்


இந்த சிகிச்சையில் ஒரு பிசியோதெரபிஸ்ட், ஒரு சிறப்பு ஆசிரியை, குதிரை பயிற்சியாளர் மற்றும் குதிரை பராமரிப்பாளர் ஈடுபடுவார்கள். குதிரை பயிற்சியாளர், குதிரை பராமரிப்பாளர் செவித்திறன், பேசும் திறன் குறைபாடு மற்றும் அறிவு சார் குறைபாடு உடைய‌ இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இந்த சிகிச்சை முறையில் பங்கு பெறுகிறார்கள்.

சிறப்பு பள்ளி மாணவர்கள்


இந்தக் குதிரை சவாரி சிகிச்சையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 30 குழந்தைகள் பயனடைகிறார்கள். அதில் சில குழந்தைகளுக்கு குதிரை சவாரிப் பயிற்சியும், மற்ற குழந்தைகளுக்கு குதிரையை சீவி விடுதல், குதிரையோடு நடத்தல், குதிரையை குளிப்பாட்டுதல் போன்ற பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த குதிரை சவாரி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குதிரைகள் நன்கு பயிற்சி பெற்று மென்மையாகவும் கட்டளைகளுக்கு கீழ்படியுமாறு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி