முகப்பு /செய்தி /திருச்சி / பாரில் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் படுகொலை... சமயபுரத்தில் பரபரப்பு..!

பாரில் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் படுகொலை... சமயபுரத்தில் பரபரப்பு..!

கொலை செய்யப்பட்ட இளைஞர்

கொலை செய்யப்பட்ட இளைஞர்

Samayapuram Murder | சமயபுரம் பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் பாருடன் உள்ளதால் அங்கு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

சமயபுரம் அருகே மதுபான பாரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் பாபு (28). வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான எஸ்.கல்லுக்குடிக்கு வந்து சமயபுரத்தில் பூ கட்டும் வேலை செய்து வந்தார். அத்துடன்,  சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்கதர்களிடம் இடைத் தரகராக பணத்தைப் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையை செய்து வந்துள்ளார்.

அதேபோல் சமயபுரம் அருகே வி.துறையூரைச் சேர்ந்த சுள்ளான், அவரது சகோதரர் கடலை வியாபாரி கணேசன் பக்தர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பக்தர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக பாபுவுக்கும், சுள்ளான் மற்றும் அவரது சகோதரர் கணேசனும் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை மாலை அரசு மதுபான கடை பாரில் பாபு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு சுள்ளான் அவரது  சகோதரர்களுடன் மது அருந்த வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சுள்ளான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிடிஆர் பெயர் நீக்கம்- கட்சியில் சலசலப்பு

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளான கடலை வியாபாரி கணேசன், சுள்ளான், வெங்கடேஷ், விநாயகம் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனார். சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் பாருடன் உள்ளது. மதுபான கடைக்கு முன்பாகவே அமர்ந்து மது அருந்தும் நபர்களால் அடிக்கடி தகராறு ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது. மேலும் மது போதையில் சிலர் டாஸ்மாக் ஊழியர்களை வெட்டியதும், அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடப்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு வரும் பக்தரிடம் பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்பவர்கள் மீது கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

top videos

    செய்தியாளர்: சே.கோவிந்தராஜ்

    First published:

    Tags: Crime News, Trichy