Home /trichy /

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நவராத்திரி உற்சவ விழா 26ம் தேதி துவக்கம்.!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நவராத்திரி உற்சவ விழா 26ம் தேதி துவக்கம்.!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

Trichy Samayapuram Mariyamman Kovil | திருச்சி சமயபுரம் மாரியம்மன்  கோவில் நவராத்தி உற்சவ விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நவராத்தி உற்சவ விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. மேலும், இந்த ஆலயத்தின் சிறப்புபடி பக்தர்கள் கூட்டம் அன்று அதிகமாக இருக்கும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் என்றாலே தனிச்சிறப்பு. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்து பூச்சட்டி எடுத்தும் வழிபடுவார்கள்.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம்,

தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷாசூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து, 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 26-ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 26-ம் தேதியன்று அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 27-ம் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 28-ம் தேதி கல்யாணி லங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார். 29-ம் தேதி ரோகினி அலங்காரத்திலும் 30-ம் தேதி காளகா அலங்காரத்திலும், அக்டோபர் மாதம் 1-ம் தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார்.

அக்டோபர் 2-ம் தேதி ஸாம்பவி, துர்கா அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவான 3-ம் தேதி சுபத்ரா அலங்காரத்திலும், (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். அக்டோபர் 4-ம் தேதி விஜயதசமியன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.

அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Published by:Arun
First published:

அடுத்த செய்தி