ஹோம் /திருச்சி /

திருச்சியில் இரவை பகலாக்கிய ஆயிரக்கணக்காண தீபங்கள்: காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

திருச்சியில் இரவை பகலாக்கிய ஆயிரக்கணக்காண தீபங்கள்: காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

திருச்சி

திருச்சி விளக்கு

Trichy | திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயிலில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றும் சகஸ்ரதீப வழிபாடு மற்றும் கூட்டு வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • tiruch, India

கார்த்திகை மாதம் என்றால் கோவில்களிலும் வீடுகளிலும் விளக்கு ஏற்றுவது வழக்கம். குறிப்பாக வைணவ கோயில்களில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு இந்த மாதத்தில் நடைபெறும்.

அதில் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் உப கோயிலான காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.

ஆயிரக்கணக்கான விளக்குகள்

சகஸ்ர தீபத்தையொட்டி கோயில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.

ஆயிரக்கணக்கான விளக்குகள்

கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை, ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy