திருச்சி ரயில்வே கோட்டம் இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.138.38 கோடி வருவாயை ஈட்டியுள்ளது என்று திருச்சி ரயில்வே கோட்ட பொதுச் செயலாளர் மணி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்ட பொதுச் செயலாளர் மணி அகர்வால் கலந்து கொண்டு பேசும்போது, 2021 -22-ம் நிதியாண்டில் திருச்சி ரயில் கோட்டத்துக்கு பயணிகள் மூலமாக கிடைக்கும் வருவாய் 150.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பயணிகள் வாயிலாக ரூ.55.21 கோடி வருவாய் மட்டுமே கிடைத்தது.
அதேவேளையில் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.138 கோடியே 38 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் சரக்கு கையாளுதல் மூலம் திருச்சி ரெயில்வே கோட்டம் ரூ.280.03 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இதுவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 117 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
2021 ஏப்ரல் முதல் ஜூலை 2022 வரை 8.46 மில்லியன் மக்களை திருச்சியில் ரயில் கோட்டம் கையாண்டு இருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் மேலும் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy