முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த யூடியூபர் அசார்... டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அலப்பறை..!

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த யூடியூபர் அசார்... டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அலப்பறை..!

யூடியூப்பர் அசார்

யூடியூப்பர் அசார்

Youtuber azar | பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அசாருக்கு இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிக்கு சென்ற யூடியூப்பர் அசாரை பார்க்க குவிந்த கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப காலங்களில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் youtube லைவ், facebook லைவ், சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது, பைக் சாகசத்தில் ஈடுபடுவது வரை காணொளி காட்சிகளை பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர். Travel vlogger டிடிஎஃப் வாசன் இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின்  விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள் இருந்த நிலையில் அவர் பதிவிட்ட அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை தற்போது 1 .20 லட்சமாக உயர்ந்துள்ளது. இவரது யூடியூப் பக்கத்தில் இளைஞர்கள் பட்டாளத்தோடு அதிவேகமாக பைக் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதையும் படிங்க; என் பிறந்தநாள் பரிசு..! - கர்நாடக முதல்வர் குறித்த கேள்விக்கு டி.கே.சிவகுமார் வைத்த சஸ்பென்ஸ்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அசாருக்கு இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. முன்கூட்டியே தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் திருச்சி வருவதை அறிவித்த அசார், குறித்த நேரத்தில் விலை உயர்ந்த பைக்குடன் சென்றுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் உடனே அசாரை காண குவிந்தனர். திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கிய பைக் பயணம் இளைஞர்களின் அலறல் சத்தத்துடன் பைக்கில் அதிவேகமாக ஊரை சுற்றியுள்ளனர். பைக்கை ஃபாலோ செய்து இளைஞர்கள் கூச்சலிட்டபடி ஒடினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி.

    First published:

    Tags: Local News, Trichy