திருச்சி பொன்மலை சந்தை கிட்டத்தட்ட 97 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த சந்தை ஆகும். இது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் செயல்படும் வாரச்சந்தையாகும்.
ஆரம்ப காலத்தில் உழவார் சந்தையாக செயல்பட்டு வந்த பொன்மலை சந்தை, மக்கள் தொகை பெருக்கத்தால் மக்களுக்கு தேவையான அனைத்து வகை உணவு பொருட்கள் முதல், வீட்டு உபயோகப் பொருட்கள், துணி வகைகள், இறைச்சி மற்றும் மீன், கோழி, கால்நடைகள் மற்றும் இதர பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை சந்தை செயல்படும்.
திருச்சி பொன்மலை சந்தைக்கு செல்லும் வழி:
திருச்சி சத்திரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்தையின் ஆரம்ப இடத்தில் மீன் இறைச்சி மற்றும் அனைத்து வகையான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மீன் வகைகள்:
பாறை, வஞ்சிரம், நெய்மீன், நண்டு, இறால்,வாவல், சங்கரா, ஜிலேபி, விரால், கெண்டை என ஏகப்பட்ட வகைகள்.
அதற்கு அடுத்ததாக காய்கறி வகைகள், மளிகை பொருட்கள், துணிக்கடைகள் மற்றும் பாத்திர வகைகள் என பலவிதமான அத்தியாவசிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் பின்னர் அனைத்து வகையான வளர்ப்பு பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் ஒரு புறமும், அதற்கு தேவையான கூண்டுகள் மற்றொரு புறமும் விற்பனை செய்கின்றனர்.வண்ணமயமான மீன்கள் மற்றும் அதற்கு தேவையான மீன் தொட்டிகள் மற்றும் உணவு பொருட்கள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன. இதற்கெனவே பல கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
பறவை வகைகள்:
Love Birds, வாத்து, கிளி வகைகள், புறா, சண்டைக் கோழி, வளர்ப்பு கோழி மற்றும் பலதரப்பட்ட பறவை வகைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
செல்லப்பிராணி வகைகள்:
நாய், பூனை, முயல் மற்றும் பலதரப்பட்ட செல்லப்பிராணி வகைகள்.
அதற்கு அடுத்து வளர்ப்பு பறவை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இங்கு விற்க்கப்படுது. இதனை தொடர்ந்து செடி வகைகள் மற்றும் மரக்கன்றுகள் இருந்தன.
மேலும் வீட்டுக்கு தேவையான மரப் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்கள் என பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வாரச் சந்தை என்பதால் நாள் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பொன்மலை சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கியும் விற்பனை செய்தும் வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy