ஹோம் /திருச்சி /

திருச்சி ஊர் காவல் படையில் சேர விருப்பமா? - காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

திருச்சி ஊர் காவல் படையில் சேர விருப்பமா? - காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

ஊர்காவல் படை

ஊர்காவல் படை

Trichy District | திருச்சி மாநகர் ஊர் காவல் படையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்காவல் படையில், போக்குவரத்த சீர் செய்யும் பணிகளும் வழங்கப்படும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகர் ஊர் காவல் படையில் 23 ஆண்கள் 5 பெண்கள் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்காவல் படையில், போக்குவரத்த சீர் செய்யும் பணிகளும் வழங்கப்படும்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

ஊர் காவல் படைகளில் இணைய விரும்புவோர்களுக்கு வரும் 12 தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, திருச்சி மாநகரில் கே.கே.நகர் காவல்நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தேர்வு நடக்கிறது.

மேலும், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், 03 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

திருச்சி ஊர் காவல் படையில் சேர அடிப்படை தகுதி :

1. பத்தாம் வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

2. வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

3. உயரம் ஆண்-165 செ.மீ. பெண் - 155 செ.மீ இருக்க வேண்டும்.

4. திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

5. குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.

6. எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், திருச்சி மாநகரில் ஊர்காவல்படையில் சேர்ந்து பணியாற்றிட மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Job, Local News, Trichy