ஹோம் /திருச்சி /

கொள்ளிடக்கரையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்.. திருச்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்...

கொள்ளிடக்கரையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்.. திருச்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்...

X
திருச்சி

திருச்சி

Trichy News : திருச்சி கொள்ளிடக்கரையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடக்கரை பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கிறது. இதை அள்ள வேண்டும் என்று பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தபோதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர் அதிகாரிகள்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடக்கரையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள். இங்கு சுற்றியுள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், சலூன் கடையில் இருந்து கழிவுகள் மற்றும் ஹோட்டல்களில் மிஞ்சிய உணவுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை கொட்டப்படுகிறது.

இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது அதோடு ஈக்கள் அதிக அளவில் இருக்கிறது. குப்பையில் இருந்து வரும் ஈக்கள் அருகாமையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் உணவுகள் மீது அமர்வதால் இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதையும் படிங்க : திருச்சியில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க ட்ரோன்கள் அறிமுகம்

அதிலும் ஒரு சில மதுப் பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கே வீசி உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் சில சமூக விரோதிகள் இங்கு இருக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தீ வைத்தும் எரிப்பதால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுவாச நோய் உள்ளோருக்கு மேலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்த குப்பை கழிவுகளால் ஆற்றில் கலப்பதால் சுகாதார சீர்கேடும்,நோய் தொற்று அபாயமும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி இருக்கிறது இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சமயபுரம் மற்றும் சமயபுரத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

அப்படிப்பட்ட இந்த நீர் தேக்க தொட்டி அருகே மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது இந்த குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மண்ணுக்கு அடியில் உள்ள நீருடன் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும். இந்த நிலத்தடி நீரை பருகும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி மாவட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த குப்பைகளை போர்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tamil News, Trichy