திருச்சி வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சிக்கு அடையாளமாக இருப்பது பல நூற்றாண்டுகளை கடந்த பழமை வாய்ந்த மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் கோயிலாகும்.
கோயிலின் பாறைக்கு மலைக்கோட்டை என்று பெயர் உண்டு. மேலும் மலைக்கோட்டை செல்லும் வழியில் தாயுமானவர் சன்னதி உள்ளது. ஏறத்தாழ உச்சி பிள்ளையார் கோவிலை சென்றடைய தரையிலிருந்து 437 படிகளை ஏறி செல்ல வேண்டும். இது பழமையான கோவில் என்பதால் பல நாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரோப் கார் வசதி பல ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பு ஆக இருந்தது வருகிறது.
தமிழகத்தில் 1977-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 10 லட்சம் ரூபாய் இந்த திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்கள் ரோப் காருக்கு பதிலாக இழுவை ரயில் அமைக்கலாம் என்று யோசித்தனர். ஆகையால் திட்டம் கைவிடப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. சென்ற ஆட்சியில் திருச்சியைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன், ‘மலைக்கோட்டைக்கு ரோப் கார் வசதி கண்டிப்பாக அமைத்துத் தருகிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
மேலும் தற்போது உள்ள திமுக ஆட்சியில் இந்து அறநிலைத்துறை சார்பில் பல்வேறு கோவில்கள் வசதிகள் செய்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலைக்கோட்டைக்கு வருகை புரிந்த போது கண்டிப்பாக மலைக்கோட்டைக்கு ரோப் கார் வசதி அமைத்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் மலைக்கோட்டை கோவிலுக்கு செல்ல முடியாத நிலை தற்போது இருந்து வருகிறது.
ரோப் கார் வசதி குறித்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிப்பு இருதயராஜும் சட்டசபையில் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார். எனவே ரோப் கார் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ என்று பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.