ஹோம் /திருச்சி /

திருச்சியில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் குகை மீன் கண்காட்சி!

திருச்சியில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் குகை மீன் கண்காட்சி!

குகை

குகை மீன் கண்காட்சி

Trichy News | திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மீன் குகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை கவர்ந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பல வண்ண வண்ண மீன்களுடன் அமைக்கப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் மீன் குகை கண்காட்சியை திருச்சி மக்கள் ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக கண்டு களித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக கடலில் இருக்கும் வண்ண வண்ண மீன்களுடன் குகை வடிவில் மீன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டுகளிக்க பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து குவியும் பொதுமக்கள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி மைதானத்தில் பிரம்மாண்ட பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாட சிறிய ராட்டினங்கள் முதல் பெரிய ராட்டினங்கள் வரையிலும், பசியாற டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி என பல வகையான தின்பண்டங்களும் இங்கு கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அனைத்து உபயோகப் பொருட்களின் ஸ்டால்களும் இங்கு ஏராளமாக உள்ளன. இந்த பொருட்காட்சியில் அமைந்துள்ள குகை மீன் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.

இதையும் படிங்க : மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் சுமார் 125 அடி நீளத்தில் குகை போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இங்கு தலைக்கு மேலே பெரியதும் மற்றும் சிறியதுமான வண்ண வண்ண மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் நீலத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் கடல் நிறத்திற்கு ஒப்பாக இருப்பதாலும், நம்மை சுற்றி மீன்கள் அங்கும் இங்கும் நீந்துவதாலும் ஏதோ கடலுக்கு அடியில் நடப்பது போன்று இருப்பதாக இதை காண வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சியில் வெயிலின் தாக்கத்தை தணிக்க அவ்வப்போது மழை பெய்வதால் மிதமான தட்பவெட்பநிலை நிலவுகிறது. இதுவும் மக்களுக்கு உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy