முகப்பு /செய்தி /திருச்சி / கால் நூற்றாண்டுக்கு பிறகு.... '96' பட பாணியில் மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் - திருச்சியில் நெகிழ்ச்சி

கால் நூற்றாண்டுக்கு பிறகு.... '96' பட பாணியில் மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் - திருச்சியில் நெகிழ்ச்சி

பழைய பள்ளி மாணவர்கள் சந்திப்பு

பழைய பள்ளி மாணவர்கள் சந்திப்பு

திருச்சி யு.டி.வி., மேல்நிலைப் பள்ளியில் 1996- 98ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 96 பட பாணியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து தங்கள் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி யு.டி.வி., மேல்நிலைப் பள்ளியில் படித்த, 12ம் வகுப்பு மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றாக சந்தித்த அபூர்வ நிகழ்வு அரங்கேறியுள்ளது.

திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே யு.டி.வி், அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த, 1996- 98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது.

அப்போது படித்த மாணவ, மாணவிகள், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவில், தலைமையாசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அடுத்ததாக, முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிரும் நிகழ்வாக மாறியது. இறுதியாக, முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சியுடன் விழா இனிதாக நிறைவுற்றது.

இதையும் படிங்க : ‘லேடி’ கெட்டப்பில் டான்ஸ் ஆடி அசத்திய சிறுவர்களின் ப்ராக்டீஸ் வீடியோ..!!

விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

top videos

    இப்பள்ளி துவங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: School students, Trichy