Home /trichy /

திருச்சி என்ஐடியில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி என்ஐடியில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி என்.ஐ.டி

திருச்சி என்.ஐ.டி

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆய்வு மாணவர் பதவி காலிப் பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்ததெந்த பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

    என்ஐடியில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்திற்கு மொத்தம் காலியிடங்கள் 4 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடத்திற்கு மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவரின் வயது 28க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing Technology, CAD, CAM, Electrical, Electronics, Mechanical, Metallurgical and Meterial Science, Aero, Thermal போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பிரிவுகளில் எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். நேர்முக தேர்வின்படி பணிக்கு ஆள்கள் நியமிக்கப்படுவார்கள்.

    www.nitt.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனை ஒரே பிடிஎப் பைலாக மாற்றி drdosrfnit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கு கடைசி தேதி: 16.09.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி