Home /trichy /

திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.

Trichy District: திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

  திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்.

  ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்

  பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்ததால் சாலையில் வழியே இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

  இந்நிலையில் கோவில்பட்டி சாலையில் ஆம்புலன்ஸ் அவசர தேவைக்காக சென்றது. அதை பார்த்த பக்தர்கள் சில வினாடிகளில் ஒதுங்கிக் கொண்டு ஆம்புலன்ஸுக்கு வழி விட்டனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் எவ்வித இடையூறுமின்றி சென்றது . இது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது .ஆம்புலன்சுக்கு பக்தர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  விபத்தில் பெண் போலீஸ் காயம்

  திருச்சி ஜியபுரத்தை சேர்ந்தவர் வித்யா இவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்திற்கு பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்தார்.

  கரூர் பைபாஸ் ரோட்டில் கலைஞர் அறிவாலயம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
  இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  புள்ளம்பாடியில் 59.60 மில்லி மீட்டர் மழை பதிவு

  திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம். கல்லக்குடி 15.40 , லால்குடி 2.40, மணப்பாறை 10.40,துவாக்குடி 4.10, துறையூர் 1, ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 128.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரி மழையாக 5.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

  குதிரை மாட்டு வண்டி பந்தயம்.

  திருச்சி மாவட்டம் தொட்டியத்தியத்தில் குதிரை வண்டி. மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.அதில் பெரிய குதிரை , சிறிய குதிரை, பெரிய இரட்டை மாடு, ஒத்த மாடு, சைக்கிள் பந்தயம் ஆகியவை நடைபெற்றது. போட்டியில் சென்னை, நாமக்கல், திருச்சி, லால்குடி, உள்ளிட்ட பல்வேறு குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் பங்கேற்றன. மாட்டு வண்டிகளின் உரிமையாளருக்கு எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கினார்.

  36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று 36 ஆறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

  அதன்படி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், தெப்பக்குளம் ,இருதயபுரம், மேலகல்கண்டார் கோட்டை, எடமலைப்பட்டிபுதூர் ,பீமநகர், பெரிய மிளகுபாறை, ராமலிங்க நகர் ,காந்திபுரம், உரையூர், காட்டூர், திருவரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவானைக்காவல், தாராநல்லூர், சுப்ரமணியபுரம், அண்ணாநகர், சையது நகர், போன்ற இடங்களில் இன்று பூரண தடுப்பூசி முகாம் நடைபெறும்.

  தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெறுகிறது.

  தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு.

  மாநில சுயாட்சி இருந்தால் தான் சமூக நீதியை முழுமையாக அடைய முடியும். இன்னும் மாநில சுயாட்சிக்காக போராடி வருகிறோம்.
  மாநில சுயாட்சி ஒரு தண்டவாளம், சமூக நீதி ஒரு தண்டவாளம் இரண்டும் இருந்தால் தான் திராவிட மாடலை முழுமையாக பெற முடியும்.மத்திய அரசின் பிடரியை பிடித்து உலுக்கும் தைரியம் பெற்றவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தங்க குடத்தில் புனித நீர்.

  வக்கிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதி பீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தை நடுநாயகமாக நேற்று பஞ்ச பிரகார மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் இருந்து காலை 10 மணிக்கு யானை மீது புனிதநீர் அடங்கிய தங்கத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க கடைவீதி ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் உள்ள உற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட உற்சவ அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டது.

  செய்தியாளர் -என்.மணிகண்டன்

  திருச்சி.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி