Home /trichy /

திருச்சி தேசியக் கல்லூரியில் புதிய சான்றிதழ் படிப்பு தொடக்கம்

திருச்சி தேசியக் கல்லூரியில் புதிய சான்றிதழ் படிப்பு தொடக்கம்

திருச்சி தேசியக் கல்லூரி

திருச்சி தேசியக் கல்லூரி

திருச்சி தேசியக் கல்லூரியில் நூலகத் துறை தொடர்பாக புதிதாக சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    திருச்சி தேசியக் கல்லூரியில் புதிதாக சான்றிதழ் படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நூலகத்துறை சார்பாக ஒளி-ஒலி அரங்கில் முதல்வர் கே.குமார் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் கா.ரகுநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் பங்கேற்றார்.

    நூலக மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் உங்களுக்கு கிராமப்புற நூலகம், மாவட்ட மைய நூலகம், பள்ளி நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் உள்ள நூலகங்களில் நூலக உதவியாளர் மற்றும் உதவி நூலகர் ஆகிய பணி வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

    அதுமட்டுமில்லாமல் மாணவர்களாகிய நீங்கள் இக்காலத்திற்கு தகுந்தாற்போல் நூலக மென்பொருட்கள் கணினி தொழில்நுட்பங்களையும் மற்றும் நவீன நூலகத்திற்கு ஏற்றார் போல் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

    இதில், கல்லூரி துணைமுதல்வர் முனைவர் பென்னட், அறிவியல் முதன்மையர் முனைவர் டி.வி.சுந்தர், முன்னாள் கல்லூரி நூலகர் முனைவர் சுரேஷ் உட்பட நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், நூலகத்துறை மாணவர்கள், நூலக உதவியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில், நூலகத்துறை மாணவர்கள் ராதா, ஜிஷ்ணு ஆகியோர் நன்றி கூறினர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி