முகப்பு /செய்தி /திருச்சி / பால் விநியோகம் தாமதம் : திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முகவர்கள்!

பால் விநியோகம் தாமதம் : திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முகவர்கள்!

பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டம்

பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டம்

Trichy Aavin Protest | பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 4- வது நாளாக ஆவினுக்கு பால் அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் ஆவின் பண்ணையில் இயந்திரங்கள் பழுது காரணமாக பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து பால் முகவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஆவின் நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் தினமும் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் விற்பனை சராசரியாக 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருச்சி ஆவின் நிறுவனத்தில் பல மாதங்களாக இயந்திரங்கள் பராமரிப்பின்றி கிடப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் முகவர்களுக்கு தாமதமாகவே பால் அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆவின் நிறுவனம் முன்பு முகவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Also Read : எந்த ரேசன் அட்டை? யாருக்கெல்லாம் கிடைக்கும் மாதம் ரூ.1000..? வெளியான தகவல் இதுதான்!

இதனிடையே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 4- வது நாளாக ஆவினுக்கு பால் அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சர்க்கரைப் பட்டி கிராமத்தில் விவசாயிகள் கறவை மாடுகளுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பாலை கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

First published:

Tags: Aavin, Trichy