முகப்பு /செய்தி /திருச்சி / மணப்பாறையில் நடந்த கொடூர சம்பவம்...16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது...

மணப்பாறையில் நடந்த கொடூர சம்பவம்...16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது...

3 பேர் கைது

3 பேர் கைது

Manapaari Harresment | வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மணப்பாறையில் உள்ள தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த 1ம் தேதி பணிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் செல்போன் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது அவருடன் பேசிய நபர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு சென்ற காவலர்கள் சிறுமியையும், அவருடன் இருந்த ரியாஸ், சதாம் ஆகியோரையும் மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க: வாட்ஸ் குருப் மூலம் பாலியல் தொழில்: கூகுள் பேயில் பணம் வந்த பிறகே உல்லாசம்... கன்னியாகுமரியில் 2 பெண்களுடன் சிக்கிய கும்பல்...

அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேலூரில் இருந்த சிறுமியின் காதலன் முபாரக் அலி என்பவரையும் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறி பெங்களூரு அழைத்து சென்ற முபாரக் அலி பாலியல் வன்கொடுமை செய்ததும், அவர் பணிக்கு சென்ற பின் அவரது நண்பர்களான ரியாஸ், சதாம் ஆகியோரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறுமியை கடத்திச் செல்லுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி 3 பேரையும் இன்று காலை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: ராமன், திருச்சி.

    First published:

    Tags: Crime News, Manaparai, Trichy