முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி மலைக்கோட்டை சித்திரைத் தேரோட்டம்.. மின்கம்பிகளில் தேர் சிக்கியதால் பரபரப்பு..!

திருச்சி மலைக்கோட்டை சித்திரைத் தேரோட்டம்.. மின்கம்பிகளில் தேர் சிக்கியதால் பரபரப்பு..!

திருச்சி மலைக்கோட்டை சித்திரைத் தேரோட்டம்..

திருச்சி மலைக்கோட்டை சித்திரைத் தேரோட்டம்..

Trichy | திருக்கல்யாண உற்சவம், சுவாமி அம்மன் திருவீதி உலா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

'தென் கைலாயம்' என்று போற்றப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு பிரசித்தி பெற்றது.

நடப்பாண்டு சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்வுகளான செட்டிப் பெண்ணாக இறைவன் உருவெடுத்து பிரசவம் பார்த்து, தாயுமானவராக மாறிய வைபவம் கடந்த, 29ம் தேதி நடந்தது.

திருக்கல்யாண உற்சவம், சுவாமி அம்மன் திருவீதி உலா கடந்த, 30ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. "சம்போ மகாதேவா.. ஓம் நமசிவாய.." என்ற கோஷங்கள் முழங்க, கைலாய வாத்தியங்கள், மங்கல வாத்தியங்கள், தாரை, தப்பட்டைகள் அதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சுவாமி தேர், கீழ ஆண்டாள் வீதி தேர் நிலையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், தேர் பக்கவாட்டின் மேற்புறம் மின் கம்பியில் சிக்கியது. உடனே மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, சிக்கல் சரி செய்யப்பட்டு தேர் நகர்த்தப்பட்டது.

இதனால் அரைமணி நேரம் தாமதமாக தேர் புறப்பட்டது. முன்கூட்டியே அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

Also see... சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா... நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி சிவகாமி அம்பாள் வீதி உலா..!

பக்தர்கள் கோரிக்கை

'தாயுமான சுவாமி சித்திரைத் தேரோடும் கீழ ஆண்டார் வீதி, சின்னக்கடை வீதி, நந்திக் கோயில் தெரு ஆகிய பகுதிகள், திருச்சி மாவட்டத்தின் பிரதான கடைவீதி பகுதிகளாக விளங்குகின்றன. இதனால் எப்போதுமே இப்பகுதிகள் நெரிசலாக காணப்படும். மேலும், இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளும் சிலந்தி வலை போல ஒன்றோடு ஒன்றாக பின்னி கொண்டிருக்கும். எனவே, வருகின்ற ஆண்டிற்குள், இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றி தர வேண்டும்.

top videos

    மேலும், தேர் ஓடுவதற்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுமையாக அகற்ற வேண்டும்' என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Car Festival, Trichy