Home /trichy /

தீராத கடன் தொல்லையா... நிம்மதி இல்லையா? - திருச்சியில் உள்ள ஸ்ரீ காட்டழகிய சிங்கரை வணங்குங்கள்!

தீராத கடன் தொல்லையா... நிம்மதி இல்லையா? - திருச்சியில் உள்ள ஸ்ரீ காட்டழகிய சிங்கரை வணங்குங்கள்!

காட்டழகிய சிங்கர் கோயில்

காட்டழகிய சிங்கர் கோயில்

திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஸ்ரீ காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில். இந்த கோவிலின் கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் மேற்கு நோக்கி பிரம்மாண்டமாக, இடது மடியில் மகாலட்சுமி தாயாரை அமரவைத்தபடி அமர்ந்துள்ளார் ஸ்ரீ காட்டழகிய சிங்கர். காட்டைத் திருத்தி இங்கே ஆலயம் எழுப்பியதால், காட்டில் அமர்ந்த பிரான் காட்டழகிய சிங்கர் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீகாட்டழகிய சிங்கர்


ஸ்ரீராமாநுஜரின் சீடரான பிள்ளை லோகாச்சார்யர் இந்த கோவில் சிங்கர் மீது வியந்து ஸ்ரீவசநவ பூஷணம் போன்ற 18 கிரந்தங்களை இயற்றியுள்ளார். 1297ஆம் ஆண்டு ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்குள் மண்டபத்தின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் மிகச் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. இதில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், அனந்த நரசிம்மர் போன்ற பல வடிவங்களில் நரசிம்மர் படங்கள் வரையப்பட்டுள்ளன.

கடன் தொல்லை தீரும்:

இந்த ஸ்ரீ காட்டழகிய சிங்கர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டால் விரும்பிய வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் யோகம், தொழில்-வியாபார அபிவிருத்தி போன்றவற்றை கிட்டும் என்று கூறுகின்றனர். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு இங்கு செய்யப்படும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், வாழ்க்கை மீதான அச்சம் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு



தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குடும்பத்தில் சண்டையால் அமைதி இன்றி நிம்மதி இழந்தோர், தோஷம், சாபம் மற்றும் பாவம் போன்றவற்றால் துன்பப்படுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அழகிய காட்டு சிங்கரையும், லட்சுமி தாயாரையும் மனதார வேண்டிக் கொண்டால் பிரச்னைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கோவிலில், வஸ்திரமும் துளசியும் சாத்தி வழிபட்டால் நீங்காத புகழையும் குறையாத செல்வத்தையும் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. திருமகளை தன் மடியில் தாங்கியுள்ள இந்த சிங்கரை வணங்கினால் திருமண வரமும் எளிதில் கிட்டும் என்கிறார்கள். இந்த நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர நாள்கள், பங்குனி யுகாதி, வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், விஜயதசமி, வன்னி மர அம்பு எய்யும் விழா போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி