முகப்பு /திருச்சி /

வறண்ட பாறைகளில் இருந்து வடியும் நீர்.. திருச்சியில் ஒரு அதிசய சிற்றோடை!

வறண்ட பாறைகளில் இருந்து வடியும் நீர்.. திருச்சியில் ஒரு அதிசய சிற்றோடை!

X
Trichy

Trichy Kallupuli Ayyanar Temple

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி நகருக்கு பக்கத்துல, வறட்சியான ஒரு பகுதியில பாறைகளுக்கு நடுவுல இருந்து தண்ணீர் வடிந்து ஒரு சிற்றோடை போல ஓடிட்டு இருக்கு, இந்த நீர் எங்கிருந்து வருதுனுலாம் தெரியாது, ஆனா வருஷம் முழுக்கவே இங்க குழாய திறந்துவிட்டது போல நீர் வந்துட்டு இருக்கதா அந்த பகுதி மக்கள் சொல்றாங்க.. இந்த அதிசய நீரூற்று திருச்சி சமயபுரம் பக்கத்துல்ல இருக்க ஒரு அய்யனார் கோவிலை ஒட்டி அமைஞ்சிருக்கு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி நேரா சமயபுரம் அப்பறம் அங்கிருந்து இடதுபுறமா திரும்பி அக்கரைப்பட்டின்ற கிராமத்துக்கு வந்தோம். இந்த கிராமத்துல இருக்க இந்த கல்லுப்புலியான் அய்யனார் கோவில் பக்கத்துல தான் இந்த அதிசய சிற்றோடை இருக்காம். இந்த கோயில் மட்டுமல்ல இப்பகுதி முழுவதுமே வெறும் பாறாங்கற்களாலும், முட்புதர்கள் மண்டியும் தான் காணப்படுது. பகல்ல இந்த பாதைல போறப்பவே ரொம்ப திகிலா தான் இருந்துச்சு.. நம்ம போன நேரத்துல கோவில்ல யாருமே இல்ல. என்னடா நீரூற்று ன்னு சொன்னா கோயிலுக்கு கூட்டிட்டு வரேன்னு நினைக்காதீங்க. இந்த அய்யனார் கோவிலுக்கு பக்கத்துல தான் அந்த அதிசய நீரூற்று இருக்கு...

நடிகர் விமல் - நடிகை இனியா நடித்து ஓடிடியில் பிரபலமாக பார்க்கப்பட்டு வரும் ‘விலங்கு’ வெப் சீரிஸ்ல பல முக்கிய சீன்கள் இந்த கல்லுப்புலியான் அய்யனார் கோவில்ல தான் ஷூட் பன்னியிருக்காங்க.

ரம்மியமான சூழல்ல தன்னந்தனியா இருக்க இந்த கல்லுபுலியான் அய்யனார் கோவிலை ஒட்டி இருக்குற பாறை குவியலுக்கு இடையில தான் இந்த நீர் அதிசய நீர் ஊற்று இருக்கு. இந்த ஊற்றுல தண்ணி எங்கிருந்து வருதுன்னு யாருக்குமே தெரியல ஆனா இந்த தண்ணி அவ்ளோ சுத்தமாகவும், குடிக்கிறதுக்கு அவ்வளவு டேஸ்டாவும் இருக்கும்னு சொல்றாங்க.

ALSO READ | திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா!

அதுமட்டும் இல்லாம இந்த கல்லுபுலியான் அய்யனார் கோவிலுக்கு இந்த ஊற்று நீரை மட்டும் தான் பயன்படுத்துவாங்கலாம். அதனால இந்த பகுதி மக்கள் இதை ஒரு புனித நீர் ஆகவே பாக்குறாங்க. ஊற்றில் இருந்து வரும் நீரை பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் சேகரிக்கறதுக்கு வசதியா ஒரு பைப்பை கோவில் நிர்வாகத்தினர் மாட்டி வச்சிருக்காங்க.

திருச்சி பகுதி மக்கள் இதை ஒரு அதிசய நீருற்றாகவே பாக்குறாங்க.. திருச்சி தேசிய நெடுஞ்சாலைல பயணம் போறவங்க சமயபுரத்துல இருந்து சுமார் 5 கிமீட்டர் தொலைவுல இருக்க இந்த கோவிலையும், இந்த அதிசய நீருற்றையும் ஒரு விசிட் அடிச்சு பார்த்துட்டு வரலாம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tourist spots, Trichy