வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் தோன்றிய உணவு தான் மோமோஸ். இதன் சுவை தற்போது தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியில் இருக்கும் மக்களை எல்லாம் கட்டிப் போட வைத்துவிட்டது. காய்கறிகள் அல்லது அசைவ கலவையை மாவின் உள்ளே வைத்து அதை ஆவியில் வேகவைத்தோ அல்லது வேகவைத்த பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்தால் மோமோஸ் ரெடி. உணவுப் பிரியர்கள் மத்தியில் இந்த உணவு மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாகி விட்டனர்.
இந்நிலையில், இதை சரியாக பயன்படுத்த தொடங்கினர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான ஜாபர் மற்றும் அர்ஷத். இருவரும் கல்லூரி முடிந்த பிறகு சாலையோர தள்ளுவண்டி கடையில் சிக்கன் 65, மோமோஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை தயார் செய்து தரமாகவும், சுவையாகவும் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். மாலை 6 மணி முதல் 9 .30 மணி வரை செயல்படும் இக்கடையின் சுவைக்காக தனி வாடிக்கையாளர் பட்டாளமே உண்டு.
எதோ கல்லூரி மாணவர்கள் கண்ட மசாலாவெல்லாம் போட்டு செய்கிறார்கள் என்று யாருக்கும் துளியும் பயம் வராதவாறு முறையாக சென்று மோமோஸ் செய்வதற்கு தனி வகுப்பில் சேர்ந்து கற்று பின் தான் கடை வைத்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு விற்கப்படும் மோமோஸ்க்கு தொட்டுக்கொள்ள ஒரு காரச்சட்னியையும் இவர்கள் கொடுக்கிறார்கள் அதன் சுவையும் அள்ளுகிறது.
கல்லூரி மாணவர்கள் சினிமா, மொபைல் என்று நேரத்தை செலவிடுபவர்கள் மத்தியில் பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்து அவர்களின் பாரத்தை இறக்க நினைக்கும் இதுபோன்ற மாணவர்கள் காவிய தலைவர்கள் தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy