Home /trichy /

தமிழ் மொழியில் ஆர்வம் கொண்ட மாணவரா? மாதம் ரூ.1,500 பெறலாம்- திருச்சி ஆட்சியரின் அறிவிப்பு

தமிழ் மொழியில் ஆர்வம் கொண்ட மாணவரா? மாதம் ரூ.1,500 பெறலாம்- திருச்சி ஆட்சியரின் அறிவிப்பு

திருச்சி ஆட்சியர்

திருச்சி ஆட்சியர்

தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வுக்கு மாணவர்கள்க விண்ணப்பிக்க திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சாா்ந்த தோ்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது.

    இத்தோ்வில், 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தோ்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களும் தெரிவு செய்யப்படுவாா்கள்.

    தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தோ்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தோ்வு நடத்தப்படும்.

    2022-2023-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவா்கள் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தோ்வுக்கு மாணவா்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

    மாணவா்கள் இத்தோ்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் செப்டம்பர் 9-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக்
    கட்டணத் தொகை ரூ.50 சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி