Home /trichy /

வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை - திருச்சி ஆட்சியரின் அறிவிப்பு

வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை - திருச்சி ஆட்சியரின் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை குறித்து திருச்சி ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    வேலை இல்லாத இளைஞர்கள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர்  மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்பட அனைத்து பிரிவைச் சேர்ந்த பதிவுதாரா்களும் பள்ளியில் படித்து 9-ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பிறகு 10-ம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள்
    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூா்த்த்தியாகி இருக்க வேண்டும்.

    தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பித்துக் கொள்ளலாம்.

    மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த்துறை சான்று தேவையில்லை.

    ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமா்ப்பிக்கலாம்.

    உதவித் தொகை பெறுவதன் மூலம் தங்கள் வேலைவாய்ப்புப் பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை. தொடா்ந்து உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து சமா்பித்தால் போதுமானது.

    சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யாவிட்டால் அவா்களது உதவித் தொகை நிறுத்தப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தோருக்கு உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. எனவே, தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருச்சி ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி