முகப்பு /திருச்சி /

பல ஆண்டுகளுக்கு பயன் தரும் பாக்கு சாகுபடி.. பயிரிட்டு வளர்ப்பது எப்படி?

பல ஆண்டுகளுக்கு பயன் தரும் பாக்கு சாகுபடி.. பயிரிட்டு வளர்ப்பது எப்படி?

X
திருச்சி

திருச்சி விவசாயி

Trichy farmer | திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் உள்ள சிறுநாவலூர் கிராமத்தில், கிராமத்தில் 20 ஆண்டுகளாக பாக்கு சாகுபடி செய்து வரும் விவசாயி இது குறித்து விளக்கம் அளித்தார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் விவசாயி ராஜ்குமார் அவர்கள் 20 ஆண்டுகளாக 3 ஏக்கரில் 3000 பாக்கு மரங்கள் வளர்த்து பாக்கு சாகுபடி செய்து வருகிறார். இது தொடர்பான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் விவசாயி ராஜ்குமார் அவர்கள் 20 ஆண்டுகளாக 3 ஏக்கரில் சுமார் 3000 பாக்கு மரங்கள் வளர்த்து பாக்கு சாகுபடி செய்து வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்வதாகவும், செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார், ராஜ்குமார்.

விதைத்தல் :

நன்கு முதிர்ந்த மரங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து விதைகளை 6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும்.ஒரு ஏக்கருக்கு 700-750 நாற்று நடவு செய்யலாம்.

பாக்கு மரம் வளர நிழல் அவசியமானது. அதனால், வாழை போன்ற பயிர்களை ஊடுபயிராக நட்டு நிழல் கொடுக்கலாம் எனவும், பாக்கு மரம் 3 வருடங்களுக்கு நன்கு வளர்ந்த பின்னர், வாழை சாகுபடி செய்யப்பட்டு, பாக்கு மரம் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது.

வளர்க்கப்படும் நாட்கள் :

நவம்பர் – பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், மார்ச் – மே மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை :

நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். மரம் மிகவும் மெலிதாக இருப்பதால், பகல் 2 மணிக்குமேல் அடிமரத்தில் வெயில் பட வாய்ப்பு உண்டு.வெயில் பட்டால், மரம் வெடித்து விடும் அபாயம் உண்டு அவற்றை பாதுகாக்க, பாக்கு மட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் லாபம் என்று பார்த்தால் சீசன் பொறுத்து தான் அமையும் என்று கூறினார்.

30 வருடங்களுக்கு மேல் பாக்கு சாகுபடி பயன் அளிக்கிறது. தென்னைக்கு மாற்றாக விவசாயிகள் பாக்கு மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். பாக்கு மரம் பொதுவாக மலைத் தோட்டப் பயிராகும். நமது தமிழ்நாட்டில் கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை போன்ற பல மாவட்டங்களில் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. மற்ற இடங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Trichy